நான் ரெய்னாவை பற்றி அப்படி சொல்லவே இல்லை அந்தர் பல்டி அடித்த சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.
கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் யுனைடெட் அராப் எமிரேட்ஸில் இந்த வருடத்திற்கான தொடர் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் ரெய்னாவுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து பேசியிருக்கிறார். அதாவது கேப்டனாக இருக்கும் தோனி தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தில் ஒரு மிகப்பெரிய பால்கனி கொண்ட அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சுரேஷ் ரெய்னாவுக்கு அப்படி ஒரு அறை கொடுக்கப்படவில்லை
அணி நிர்வாகத்திடம், கேட்டு புதிய அறை ஒதுக்குமாறு கேட்டிருக்கிறார் ரெய்னா. ஆனால் அது நடக்கவில்லை தோனியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக தோனியுடன் கோபித்துக் கொண்டார் ரெய்னா. அதனால் உடனடியாக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகி வெளியேறுவதாக சென்றுவிட்டார் இதனை அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தற்போது வெளியே கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இப்படி எல்லாம் நான் கூறவில்லை. எனது கருத்து திறக்கப்பட்டு விட்டது. என்று கூறியுள்ளார் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன். அவர் கூறுகையில்…
சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு இத்தனை வருடங்களில் அளப்பரியது. அவருக்கு நாங்கள் ஓய்வு கொடுக்கவும் விரும்புகிறோம். அவருக்கு தேவை யான இடைவெளியை அளித்து அவர் என்ன பிரச்சனையை கையாண்டு கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக அவருக்கு நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்பது போல் பேசியிருக்கிறார் சீனிவாசன்.