மும்பை உடனான ஓபெனிங் கேமில் சிஎஸ்கே ஆடாது! சற்றுமுன் வந்த சர்ச்சை தகவல்.. காரணம் இதுதான்!

ஓபெனிங் கேமில் சிஎஸ்கே ஆடாது! சற்றுமுன் வந்த சர்ச்சை தகவல்.. காரணம் இதுதான்!

ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுவது சந்தேகம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வட்டாரத்தில் தொடர்ந்து ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் தகவல்களாகவே வந்த வண்ணம் இருக்கின்றன. முதலாவதாக தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

பின்னர் ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் மத்தியில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரானா உறுதியாகி உள்ளது. இதனால் மேலும் 14 நாட்கள் சென்னை அணி சார்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் மற்ற அணியை பொறுத்தவரை யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்ததால் அவர்கள் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பிவிட்டனர்.

சென்னை வீரர்களில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் மற்றும் கெய்க்வாட் இருவருக்கு மட்டுமே கொரோனா இருக்கிறது. அதேநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும்  விலகி இருக்கிறார். இது குறித்த சர்ச்சைகளும் நிலவி வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருப்பதாக முன்னமே அறிவிக்கப்பட்டது. அதேபோல் துவக்க போட்டியில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை இன்னும் வெளிவராத நிலையில் கொரோனா தொடர் இருப்பதன் காரணமாக சென்னை அணி இந்த துவக்க போட்டியில் ஆடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணியுடன்  வேறொரு அணி துவக்க போட்டியில் ஆடும் என்கிற தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தினால் சென்னை வீரர்கள் குணமடைய மேலும் சில காலம் கிடைக்கும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.