சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்! ஆனால் அது சுரேஷ் ரெய்னா இல்லை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 12 வருடங்களாக கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனி சில வருடங்களில் ஓய்வு பெற்றுவிடுவார். அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்.
ஏனெனில் தற்போது அவருக்கு 39 வயதாகிறது. இந்திய அணிக்காக இனிமேல் ஆடுவது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் அவர் விளையாடுவார். கடந்த 12 வருடங்களாக இவர் ஒருவரே கேப்டனாக இருந்து வந்ததால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இல்லாத காலகட்டத்தில் ஒரு சில போட்டிகளில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். அந்த போட்டிகளை வென்றும் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கும் தற்போது 33 வயதாகி விட்டது. தோனி ஓய்வு பெறும் போது அவருக்கு 35 வயது ஆகி விடும் அந்த நேரத்தில் ஒரு 35 வயதான வீரரை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் நிர்வாகம் விரும்பாது.
இதன் காரணமாக தற்போது இளம் வீரராக இருக்கும் ரவிந்திர ஜடேஜா அல்லது வேறு ஒரு இளம் வீரரை கேப்டனாக நியமிக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தோனிக்கு 41 வயதாகும் போது என்ன செய்கிறார் என்று. அப்படி இல்லை என்றால் தனியே தொடர்ந்து அந்த அணியில் ஆடுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது ஏனெனில் அவர் என்ன நினைக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.