உலக கோப்பைக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!! ஸ்மித், வார்னருக்கு இடம்!!

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிவற்றில் நடக்கும் உலக கோப்பையில் ஆடும் 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை இன்று அறிவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

மே 30 இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறும் உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இடம்பெறும் ஒவ்வொரு அணியும் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி தரப்பிற்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். ஏற்கனவே, நியூசிலாந்து தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்டது. தற்பொழுது, நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்மித், வார்னருக்கு இடம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரர்கள் ஆன ஸ்மித் மற்றும் வார்னர் இருவருக்கும் ஒரு வருட கால தடை விதித்து உத்தரவிட்டது ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். சரியாக ஒரு வருட கால தடையும் முடிந்த பிறகு, உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, அவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மிச்செல் ஸ்டார்க் மீண்டும் அணியில்..

நடுவில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மிச்செல் ஸ்டார்க் உலககோப்பையில் அணியில் இடம்பெறுவது சந்தேகமாக இருந்தது. தற்பொழுது அணியின் மருத்துவ அறிக்கையின் படி, அவர் குணம் அடைந்து விட்டதால் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளளது.

15 பேர் கொண்ட அணி விவரம்: 

ஆரோன் பின்ச் ( கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்சல் ஸ்டார்க், அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), நாதன் கூல்டர் நைல், பாட் கம்மின்ஸ், நாதன் லயான், ஜய் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜேசன் பெஹண்டிராப்.

 

Prabhu Soundar:

This website uses cookies.