எங்க ரூட் இப்ப கிளியர் ஆகிடுச்சு… இவர் இல்லாம இந்திய அணியால் ஜெயிக்கவே முடியாது; ஆரோன் பின்ச் அதிரடி பேச்சு
காய்ச்சல் காரணமாக சுப்மன் கில், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விசயமாக அமையும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 8ம் தேதி நடைபெற இருக்கும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் மிக முக்கிய வீரரான சுப்மன் கில், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதை இந்திய அணி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் சுப்மன் கில் குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சுப்மன் கில் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பின்ச், சுப்மன் கில் விலகினால் அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகமான விசயமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆரோன் பின்ச் பேசுகையில், “உலகக்கோப்பை தொடர் நீண்ட நாட்கள் நடைபெற கூடிய தொடர் என்பதால் அனைத்து அணிகளுமே தங்களது வீரர்கள் காயமடைவதையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது சுப்மன் கில்லிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, இது இந்திய அணிக்கு நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும். சுப்மன் கில் விளையாடினால் அவரை சமாளிப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலான விசயமாக இருக்கும். சுப்மன் கில்லின் பலவீனங்களை கண்டறியவே முடியாது, அவரிடம் பலவீனமே இல்லை என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு சுப்மன் கில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல பார்மிலும் உள்ளார். எவ்வளவு சிறந்த பந்தையும் அசால்டாக எதிர்கொள்ள கூடிய வீரர்களில் சுப்மன் கில்லும் ஒருவர். இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரை வேண்டுமானாலும் சுப்மன் கில்லால் இலகுவாக எதிர்கொள்ள முடியும். சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இருந்து விலகினால் அது நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விசயம் தான். சுப்மன் கில்லிற்கு பதிலாக இஷான் கிஷனிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது, இஷான் கிஷன் சுப்மன் கில் அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன் கிடையாது. இஷான் கிஷனை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் இலகுவாக சமாளிக்க முடியும். இஷான் கிஷனின் பேட்டிங்கில் சில டெக்னிஷ் குறைபாடுகள் உள்ளது, எனவே ஆஸ்திரேலிய அணி மீது இருந்த பெரிய அழுத்தமே தற்போது குறைந்துவிட்டது” என்று தெரிவித்தார்.