தென் ஆப்பிரிக்கா தன் உலகக்கோப்பை கனவைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அதன் பிரதான, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தன் தோள்பட்டைக் காயத்திலிருந்து இன்னமும் முழுதும் குணமடையவில்லை என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் முதல் 2 போட்டிகளில் ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்தை நாளை மறுதினம் தென் ஆப்பிரிக்கா சந்திக்கிறது. இதில் ஸ்டெய்ன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் ஞாயிறன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடமாட்டார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 5ம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு டேல் ஸ்டெய்ன் வருவாரா என்பதையும் பயிற்சியாளர் ஓட்டைஸ் கிப்சன் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.
பயிற்சியில் சும்மா பந்து வீசிப்பார்த்தார், குறைந்த ஓட்ட ரன் அப், மெதுவான பந்துகளாக வீசினார். பிறகு பெவிலியன் சென்றார், ஆனால் பேட் செய்ய வந்தார்.
“அவர் இன்னும் தயாராக இல்லை. தயாராவதற்கு அருகில்தான் இருக்கிறார்.. ஆனால் இப்போது தயாராக இல்லை, இது 6 வாரத் தொடர் ஆகவே இதனைப் பெரிது படுத்தத் தேவையில்லை.
சிறிது காலமாக தோள்பட்டை அழற்சியால் அவதிப்பட்டு வரும் டேல் ஸ்டெய்னின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது, இந்த உலகக்கோப்பை அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம், அல்லது ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது,
என்னதான் கிப்சன் சொன்னாலும் இந்த உலகக்கோப்பையில் எப்போது ஸ்டெய்ன் ஆடுவார் என்பது தெளிவாக இல்லை.
ஸ்டெய்ன் இல்லை என்பதால் ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் மோரிஸ் அல்லது பிரிடோரியஸ், அல்லது பெலுக்வயோ ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சியும் தேர்வுப் பரிசீலனையில் உள்ளார், இவர் கொஞ்சம் பேட்டிங்கும் செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.
உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.