இந்த விசயத்துல மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கனும் தம்பி… உம்ரன் மாலிக்கிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த டேல் ஸ்டைன் !!

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான டேல் ஸ்டெய்ன் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிர்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக சண்டை செய்து வருகிறது.

தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து வீரர்களும் ஒருபுறம் செயல்பட்டாலும், தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டுமென்றும் கவனமாக விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நெட் பவுளராக அறியப்பட்ட ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் தன்னுடைய முழு வேகத்தையும் வெளிப்படுத்தி 2022 ஹைதராபாத் அணியில் தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியவர்.

மிக எளிதாக 150kmph வேகத்தில் பந்து வீச கூடிய திறமை படைத்த இவர் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார் என்று பாராட்டப்படும் வகையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பந்து வீச்சில் அபரிதமாக வளர்ந்து வரும் இவருக்கு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹைதராபாத் அணி பவுலிங் பயிற்சியாளருமான டேல் ஸ்டெயின் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிர்க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, “உன்னுடைய பலமே உன்னுடைய வேகம் தான் அதை மட்டும் இழந்து விடாதே, யார் வேண்டுமானாலும் 130/135 வேகத்தில் பந்துவீச முடியும், ஆனால் அவரிடமுள்ள சில தனித்திறமை அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்றும் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.