தென்னாபிரிக்கா அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் தான் ஓய்வு பெறுவதற்கும் உலகக்கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஸ்டெய்ன், தென்னாபிரிக்கா அணிக்கு பல தருணங்களில் பக்கபலமாக இருந்திருக்கிறார். முன்னணி பேட்ஸ்மேன்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்துள்ளார்.
ஆனால், கடந்த சில வருடங்களாக காயம் காரணமாக சில ஆண்டுகள் அவர் ஆடவில்லை. மீண்டும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய அணியுடனான தொடரில் இடம் பெற்றார் இருந்தும் மீண்டும் காயத்தினால் வெளியேறினார்.
அதனை கடந்து வந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஆடினார். அப்பொழுது ஷான் பொல்லாக் சாதனையான தென்னாபிரிக்கா அணியின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையும் சமன் செய்தார்.
தென்னாபிரிக்கா அணிக்காக இதுவரை 2 முறை தென்னாபிரிக்கா உலாகிப்பை அணியில் ஆடியுள்ளார். ஆனால் இரு முறையும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
2019ம் ஆண்டும் அணியில் இடம்பெற்று நிச்சயம் பதக்கத்தை வென்று விட்டு தான் ஓய்வு பெற விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“ஒவ்வொரு வீரருக்கும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அணிக்காக உலகக்கோப்பையை வெல்வது தான் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். நானும் அப்படிப்பட்டவன் தான். எண்டது தலையாய விருப்பமும் அது தான். அதை 2019ம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பேன். ” என்று அவர் குறிப்பிட்டார்.
“ அதற்க்காக கடினமாக பயிற்சி செய்தும் வருகிறேன். எங்கும் வெளியில் சென்றாலும் தற்பெருமையாக கூறிக்கொள்வேன். நான் அணிக்காக உலகக்கோப்பையை என்று தந்துள்ளேன் என்று” அவர் கூறினார்.
தனது 88 டெஸ்டில், ஸ்டெயின் 421 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர 116 முறை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்டேய்ன் 35 வயதில் இருந்த போதிலும் சேர்க்கப்பட்டார்; அவர் தற்போது 23 வயதான உற்சாகத்தை கொண்டிருக்கிறார்.
நான் இன்னும் சிறிது காலம் விளையாடுகிறேன், ஆனால் நான் ஏதாவது செய்யப் போவதில்லை என்று சொன்னால் அது மிகவும் நேர்மையற்றதாக இருக்கும். நான் கிரிக்கெட்டை என் வாழ்நாள் முழுவதும் விளையாடியிருக்கிறேன், மிக விரைவாக பந்து வீச்சில் பட்டமே முடித்திருக்கிறேன், உலகக்கோப்பையில் பங்களிக்கவில்லை என்றால் எனது பிறவி பலன் ” என்று அவர் முடித்தார்.