இந்த வெறி உங்கிட்ட இல்லாதது தான் பிரச்சனை ! ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்சிபி வீரர் தீவிரம்

ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டான் கிரிஸ்டியன் இந்தாண்டு பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு நான் உதவியாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். 

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 9 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு நட்சத்திர வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் டான் கிரிஸ்டியனை ஆர்சிபி தேர்வு செய்திருக்கிறது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டான் கிரிஸ்டியன் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உடன் சேர்ந்து விளையாட இருப்பதும், சொந்த நாட்டு வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் இணைந்து இந்த ஐபிஎல் விளையாட இருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த முறை கண்டிப்பாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த முறை பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு நான் எனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறேன்.  இந்த ஐபிஎல் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்”  என்று டான் கிரிஸ்டியன் அதிரடியாக பேசியிருக்கிறார். 

Prabhu Soundar:

This website uses cookies.