ஐ.பி.எல் 2018; மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பந்துவீசுகிறது டெல்லி !!

ஐ.பி.எல் 2018; மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பந்துவீசுகிறது டெல்லி

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடரில் மும்பை – டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது இந்தியாவின் பல பகுதிகள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய லீக் போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான மும்பை அணியில் பென் கட்டிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அகிலா தனன்ஞனேயே அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதே போல் டெல்லி அணியிலும் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிறிஸ்டியனும், முன்ரோவிற்கு பதிலாக ஜேசன் ராயும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டிக்கான டெல்லி அணி;

ஜேசன் ராய், கவுதம் காம்பீர், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கிளன் மேக்ஸ்வெல், விஜய் சங்கர், டேனியல் கிறிஸ்டியன், ராகுல் திவேட்டியா, சபாஷ் நதீம், முகமது ஷமி, டிரண்ட் பவுல்ட்.

இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

ரோஹித் சர்மா, ஈவின் லீவிஸ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, பொலார்டு, மாயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முஸ்தபிசுர் ரஹ்மான், அகிலா தனன்ஞனயா.

 

Mohamed:

This website uses cookies.