நியூசிலாந்து அணிக்கு விழுந்த பெரிய அடி… டி.20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார் மிக முக்கியமான வீரர் !!

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிச்சல் அணியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களங்களில் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களால் இயன்ற அளவு அதிகமான டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது, அந்த வகையில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்ஆகிய அணிகள் முத்தொடர் போட்டியில் வருகிற அக்டோபர் ஏழாம் தேதி பங்கேற்று விளையாட உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இது ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாக இருப்பதால், இந்தத் தொடரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் ஏழாம் தேதி நடைபெறும் முத்தொடர் போட்டிக்கான பயிற்சியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர டேரில் மிச்சல் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது,இதன்காரணமாக இந்த தொடரிலிருந்து டேரில் மிச்சல் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டானா இவருக்கு கையில் ஏற்பட்ட காயம் சரியாக இரண்டு வாரம் ஆகும் என்பதால் உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாட மாட்டார் என தெரிகிறது. இதனால் அவரை தீவிர கண்காணிப்பில் நியூசிலாந்து அணியின் மருத்துவர் குழு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முத்தொடர் போட்டியில் டேரில் மிச்சலுக்கு பதில் பிளைர் டிக்னர் அணி இணைக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.