ஒரு முடிவோட தான் வந்திருக்காங்க போல… தரமான ஆல் ரவுண்டரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

ஒரு முடிவோட தான் வந்திருக்காங்க போல… தரமான ஆல் ரவுண்டரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான டேரியல் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

 

17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரை சரியான விலைக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டேரியல் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வெறும் 1 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த டேரியல் மிட்செலை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் டேரியல் மிட்செலை எடுக்க போராடியது. டேரியல் மிட்செல்லின் விலை 10 கோடி ரூபாய்க்கு மேல் சென்றபிறகும் டேரியல் மிட்செல்லிற்காக பஞ்சாப் கிங்ஸிடம் சண்டை செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியாக 14 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டிருந்த டேரியல் மிட்செல், 10 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைதத்துடன் சேர்த்து மொத்தமாக 552 ரன்கள் குவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.