இந்த காலத்து கெவின் பீட்டர்சன் இவர்தான்! ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் ஓபன் டாக்!

இந்த காலத்து கெவின் பீட்டர்சன் இவர்தான்! ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் ஓபன் டாக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமாக இருக்கும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய காலகட்டங்களில் ஐபிஎல் தொடரின் கோப்பை வென்று இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக அந்த அணியில் பெரிதான செயல்பாடு ஏதுமில்லை.

தற்போது கௌதம் கம்பீர் வெளியேறி விட்டதால், தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆடிய முதல் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மிகச் சிறந்த கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் நிலைமை எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. அந்த பனிக்குள் பல பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வருடம் பல புதிய வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் பிக்பாஷ் தொடரில் ஆடிய போது டாம் பேன்டன் அங்கு அதிரடியாக விளையாடி இருக்கிறார். அதன் காரணமாக அவரை அணியில் எடுத்திருக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி தங்கள் அணியில் தான் தற்காலத்தில் உள்ள கெவின் பீட்டர்சன் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

“அவர் கூறுகையில் நாங்கள் அவரை ஒப்பந்தம் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சி. தற்போது வரை வெளிநாட்டு வீரர்கள் இன்னும் அருகில் வந்து இணையவில்லை. பேன்டன் மைதானத்தில் ஆடுவதைப் பார்க்க ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம். பிக்பாஷ் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது அணியில் தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், குல்தீப் யாதவ், அண்ட் ரிசல் போன்ற அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிநடத்துவார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் 21 வயதான பேன்டன் இந்த காலத்து கெவின் பீட்டர்சன்  வெர்ஷன்” என்று கூறியிருக்கிறார் டேவிட் ஹசி.

Mohamed:

This website uses cookies.