உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த போரான நேரத்தை அனைவரும் பயனுள்ளதாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், காத்ரீனா கைப்பின் பாலிவுட் பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது தான் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தெலுங்கு பாடல் ஒன்றுக்கு தனது மனைவி கேண்டிஸ் உடன் நடனமாடினார்.
இந்நிலையில் வார்னரும் அவரின் மனைவியும் பாடலுக்கு மெய் மறந்து ஆடிக்கொண்டிருந்த போது இடையில் அவரின் மகளும் உள்ளே புகுந்து நடனமாடினார். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக மாறிவிட்டது.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது விளம்பரத்துக்காக வார்னர் தனது பேட்டை கத்தி போல சுற்றினார். அந்த விளம்பரத்தின் போது இயக்குனர் கட் என சொன்ன போது, உடனடியாக வார்னர் சிரிக்க துவங்கினார். இந்த வீடியோவை சமீபத்தில் வார்னர் பகிர்ந்தார்.
வார்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியின் கேப்டனார் உள்ளார். கடந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களை பாராட்டும் விதமாக வார்னர் தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார். அதில் தன்னைப்போல விராட் கோலி உள்ளிட்ட பலருக்கும் டேக் செய்து ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.