இது நடந்தால் மட்டுமே ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்கும்; டேவிட் வார்னர் சொல்கிறார் !!

இது நடந்தால் மட்டுமே ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்கும்; டேவிட் வார்னர் சொல்கிறார்

டி.20 உலகக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடைபெறும் என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் கோர தாண்டவம் எப்போது அடங்கும் என்று தெரியாத போதிலும், டி.20 உலகக்கோப்பை குறித்து ஐ.சி.சி., இன்னமும் தெளிவான முடிவை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவரே தற்பொழுது உலகக்கோப்பையை நடத்த சாத்தியமான சூழல் இல்லை என கைவிரித்துவிட்ட போதிலும் ஐ.சி.சி., விடாப்பிடியாக உலகக்கோப்பையை நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் துவங்க இருந்த ஐ.பி.எல் தொடரும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வருடத்தில் உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல் ஆகிய இரண்டு தொடரில் எதாவது ஒரு தொடர் தான் நடக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், டி.20 உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வார்னர் கூறியதாவது;

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால், ஐபிஎல் டி.20 தொடர் நடக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதேபோல ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் நிச்சயமாக பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.

ஐபிஎல் டி.20 தொடரில் எங்களுக்கு பங்கேற்க தடையாக இருப்பது அரசாங்கத்தின் அனுமதி மற்றும் பயணம் செய்வதற்கான அனுமதியும் தான். இந்த அனுமதி மட்டும் கிடைத்துவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அதிக ஆர்வமாக உள்ளனர்” என்றார்.

Mohamed:

This website uses cookies.