எனக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்! டேவிட் வார்னர் ஓப்பன் டாக்!

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் தற்போது மிக சிறப்பாக விளையாடி வரும் ஒரு ஓப்பனிங் வீரர் யார் என்று கேட்டால் அனைவரும் கூறும் ஒரு பெயர் டேவிட் வார்னர். மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் அதே சமயம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மிக சிறப்பாக பங்களித்து இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார்.

டேவிட் வார்னர் பொதுவாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் காணப்படுவார். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் இமெயில் உங்களுக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் யார் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அந்த கேள்விக்கு டேவிட் வார்னர் கூறிய பதில் அனைத்து இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்; முந்தைய காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன்

தற்பொழுது உள்ள வீரர்கள் மத்தியில் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இவர்கள் மூவரும் தனக்கு பிடித்த வீரர்கள் என்று டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு 2 தூண்களாக தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு ஒரு இந்திய அணியை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது

அதேசமயம் ரிஷப் பண்ட் தற்போது ஒரு புதிய கதாநாயனாக இந்திய அணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரின் கடைசி ஆட்டத்தில் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததோடு மட்டுமல்லாமல் தொடரை கைப்பற்ற செய்தது, இந்திய ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல அவர் ஐபிஎல் போட்டிகளில் புதிய அவதாரம் எடுத்து கேப்டனாக சிறப்பாக அணியை வழிநடத்தும் அசத்தி வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன்

24 வருடங்களாக இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் செய்த சேவை ஒரு கட்டுரையில் அடக்கி கூறிவிட முடியாது. சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர். இந்த ஒரு வரியிலேயே சச்சின் டெண்டுல்கர் யார் என்று நாம் தீர்மானத்தை விடலாம்.

மறுபக்கம் விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணி நெருக்கடியாக இருக்கும் நிலையில் வந்து மிக சிறப்பாக விளையாடுவார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர். உதாரணத்திற்கு 2001 ஆம் ஆண்டு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 281 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை அவர் தேர்ந்தெடுத்த விஷயம் இன்றுவரை இந்திய ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது.

இவர்கள் ஐந்து பெயரையும் டேவிட் வார்னர் கூறியது இந்திய ரசிகர்களை தற்பொழுது சந்தோஷப்படுத்தி உள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.