டேவிட் வார்னர் காயம்: உலகக்கோப்பைத் தொடரில் ஆடுவது சந்தேகம்!!

தற்போது நடைபெற்று வரும் சர்வதேச பிரிமியர் லீக் தொடரில் டேவிட் வார்னர் காயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் அங்கு வங்கதேசத்திலிருந்து ஆஸ்திரேலியா போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த காயம் குணமாக பல மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதன் காரணமாக அவர் உலக கோப்பை தொடரில் ஆடுவதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டார். இந்த தடை தன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியதாக வார்னர் கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்ததாகவும் கூறியுள்ளார். டாக்காவில் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஆடுவதற்காக சென்றுள்ள வார்னர் ”எனது வாழ்க்கை இப்போது சிறப்பானதாக மாறியுள்ளது. நான் என் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டேன். வீட்டில் இருந்த நாட்கள் எனக்கு நிறைய புரிதலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

பிபிஎல் தொடரில் ஷெல்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். தடைக்குப்பின் அவர் ஆடும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பந்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து சேதப்படுத்தியதற்காக வார்னர், ஸ்மித் மற்றும் பான்க்ராஃப்ட் மீது தடை விதிக்கப்பட்டது. இதனால் வார்னர் ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்தார்.

இந்த வருடம் பிபிஎல் தொடரிலும், பின்னர் ஐபிஎல் தொடரிலும் வார்னர் ஆடுவார் என்று கூறப்பட்டுள்ளது. “இங்கிலாந்தில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ஆடுவீர்களா” என்ற கேள்விக்கு “அதனை தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தவறு செய்ய டேவிட் வார்னர் ஊக்கப்படுத்தியதாக ஆஸி. வீரர் பான்கிராஃப்ட் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளதாவது:

ஆட்டத்தின் அன்றைய சூழலில் அக்காரியத்தைச் செய்யச் சொன்னார் வார்னர். எனக்கு அதற்கு மேல் தெரியாது. என்னை அணியில் எப்படி மதிப்பிடுவார்கள் என்பதை எண்ணி அந்த முடிவை எடுத்தேன். அணிக்கு இணக்கமாக இருப்பதால் மரியாதை கிடைக்கும் என எண்ணினேன். தவறுக்கான விலை மிகப் பெரிதாகக் கிடைத்தது. பந்தைச் சேதப்படுத்த முடியாது என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அடிக்கடிக் கேட்டுக் கொள்வேன். அணியின் வெற்றிக்கு உதவாமல் இருந்தேன் என அப்போது எண்ணியிருப்பேன். என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தேர்வு செய்கிற வாய்ப்பு இருந்தது. மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று பான்கிராஃப்ட் பேட்டியளித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.