முழுநேர டிக்டாக் வாசியான வார்னர்… இனி மனைவியுடன் சேர்ந்து இதையும் பண்ணுவாராம்!
டிக்டாக்கில் பிரபலமாகிவரும் வார்னர்.. இனி மனைவியுடன் சேர்ந்து இதையும் செய்யப்போவதாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் ஆட முடியாததால், டிக்டாக்கில் இந்திய பாடல்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டார். வார்னர் அவருடைய மனைவி கேண்டி மற்றும் அவர்களுடைய குழந்தை என குடும்பமே சேர்ந்து டிக்டாக்கில் குடிகொண்டுள்ளது. அடுத்த வீடியோ எப்போ சார் விடுவீங்க! என்ற அளவிற்கு இவர்களது டிக்டாக்கிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில், அண்மையில் பிரபுதேவா நடித்து வெளிவந்த தேவி படத்தின் பிரபல பாடலான “சல்மார்” பாடலுக்கு டேவிட் வார்னர் மற்றும் கேண்டி இருவரும் டிக்டாக் செய்து அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வார்னர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கேண்டி, டேவிட் வார்னருக்கு நடனமாட கற்றுக்கொடுக்கிறார்.
இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வார்னர்,” அனைவரும் என்னால் நடனமாட முடியாது என்று கமெண்ட் அடித்ததால், கேண்டியிடம் அடிப்படை குறிப்புகளை கேட்டு கற்று வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் கமெண்டுகள் குவிகின்றன.
டான்ஸ் வீடியோக்களுக்கு மட்டுமல்ல சில இந்திய சினிமாக்களில் வரும் பிரபல வசனங்களுக்கும் டிக்டாக் செய்து அந்த வீடியோக்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.
தனது வீடியோக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் பல டிக்டாக் பிரபலங்களின் வீடியோகளையும் பகிர்ந்து தன் நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார் வார்னர்.
தொடர்ந்து பல்வேறு டிக்டாக் வீடியோக்களை குறிப்பாக தமிழ்நாட்டு பிரபல பாடலான ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை டிக் டாக் செய்திருக்கிறார் வார்னர். பிரபுதேவாவின் படத்தில் வந்த “முக்காலா, முக்காபுலா” பாடல். என பல தமிழ் பாடல்களுக்கும் இவர் டிக்டாக் செய்தது படு வைரல்.