சென்னை அணியில் கேதர் ஜாதவ்க்கு பதிலாக டேவிட் வில்லி …!!

ஐபிஎல் 11-வது சீசனின் 4-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 அணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் காயத்தின் காரணமாக கேதர் ஜாதவ் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணி வீரரான டேவிட் வில்லி இடம்பெறுவர் என எதிர்பார்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, கேதர் ஜாதவ் காயமடைந்து வெளியேறினார்.

சென்னை அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தில் திண்டாடிய போது, காயத்துடன் வந்த கேதர் ஜாதவ் கடைசி ஓவரில், சிக்சரும் பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

 

 

 

இதுபற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, சிஎஸ்கே வெற்றியின் மூலம் மனரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல்ரீதியாக காயமடைந்திருக்கிறேன். அடுத்த சில வாரங்கள் என்னால் விளையாட முடியாது. இந்தப் போட்டியில் என்னால் ஓட முடியாது என்பதால், சிக்சரும் பவுண்டரியும் விளாச நினைத்தேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டியில் இருந்து கேதர் ஜாதவ் வெளியேறியுள்ளார். மேலும் இனி வரும் போராட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.
இதற்கிடையில் வேல்முருகன், சீமான் போன்றோர் மைதானத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறினார்கள்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்பட்டபடி சென்னையில் நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை நடக்க உள்ள போட்டியில் எந்த ஒரு அசம்பாவிதங்கலும் நடக்காமல் இருக்க மைதானத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமத்தித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50-ற்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது.இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் யார் வெல்வர் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Surendhar B:

This website uses cookies.