“போர்க்கண்ட சிங்கம் அக்ஸர் பட்டேல்” கடைசி வரை நின்று ஜெயித்துக்கொடுக்க… டெல்லி அணி முதல் வெற்றி…. கொல்கத்தா பந்துவீச்சில் அசத்தல்!

டேவிட் வார்னர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுக்க, கடைசிவரை நின்று போராடி வெற்றி பெற்றுக்கொடுத்தார் அக்சர் பட்டேல். கொல்கத்தா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டெல்லி கேப்பிட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. லிட்டன் தாஸ் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் வரிசையாக தங்கள் விக்கேட்டுகளை இழக்க, ஓபனிங் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராய் 43 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கடைசியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 38 ரன்கள் அடித்து கொடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தார். ஆனால் பிரித்வி ஷா(13) மீண்டும் ஒருமுறை சோதப்பினார். அடுத்துவந்த மார்ஷ்(2), பில் சால்ட்(5) இருவரும் ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற்றம் கண்டது. பின்னர் டேவிட் வார்னர் 57 ரன்களுக்கு தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக இழந்ததால், இலக்கை எட்டுவதில் டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை நின்று போராடிய அக்சர் பட்டேல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதோடு, 19 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.

19.2 ஓவர்களில் டெல்லி அணி 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி அணி, 6ஆவது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.