சென்னையை வீழ்த்திய டெல்லி அணிக்கு பலத்த அடி! அடுத்து நடக்கபோவது என்ன?

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்தாண்டு நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் 19 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 5 போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இன்றைய 6வது போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா வீரர்கள் ரபாடா மற்றும் ஆன்ரிச் நார்ட்ஜே பாகிஸ்தான் எதிரான தொடரை பாதிலயே விட்டுவிட்டு ஐபிஎல் தொடருக்கான இந்தியா வந்தடைந்து தற்போது குரான்டைனில் இருந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது நார்ட்ஜேவுக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. ஏற்கனவே டெல்லி ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கிறார்.

இதயைடுத்து டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், இவரது இந்த செய்தி அணிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சாக்கை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி அணி அடுத்தாக நாளை நடைபெறும் 7வது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒன்றை வருடங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா முன்பை விட அதிகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் கிரிக்கெட் வீரர்களும் பாதித்து வருகின்றனர்.இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தினர்.

ஆர்சிபி வீரர்கள் தேவதூத் படிக்கல், டானியல் சாம்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அக்ஷர் பட்டேல், கொல்கத்தா வீரர் நிதிஸ் ரானா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்று கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆழந்த சோகத்தில் உள்ளனர்.

Prabhu Soundar:

This website uses cookies.