இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.
கடந்த ஆண்டு துபாய் அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை, இவர் 14 போட்டிகளில் பங்கேற்று 313 ரன்கள் மட்டுமே எடுத்தார் மேலும் இவருடைய ஆவரேஜ் 25.14.
இவரின் இந்த மோசமான செயல்பட்டார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஐபிஎல் இவரை அணியில் இருந்து விடுவித்தது, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியின் ஏலம் பிப்ரவரி 18 சென்னையில் நடைபெற்றது, இதில் அதிகமான தொகைக்கு ஸ்டீவ் ஸ்மித் இடத்தில் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் வெறும் 2.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல் அணிக்கு ஒப்பந்தமானார்.
இவர் இந்த தொகை கெல்லாம் விளையாடமாட்டார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் அவர் கூறியதாவது, எனக்கு டெல்லி அணியில் சேர்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது,டெல்லி அணியின் தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் மேலும் சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.மேலும் நிச்சயமாக இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெறுவதற்கு நான் மிக சிறப்பாக உதவுவேன் என்று கூறினார்.
ஸ்டீவ் ஸ்மித் எப்பொழுது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தேர்வா தேர்வானதைப்பற்றி பேசுவார் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CLoF1osBQuB/?igshid=1ent22287l8vg