டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானித்துள்ளது! அணி விவரம் உள்ளே!

2019 ஆண்டின் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.இந்த ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற போட்டி சூப்பர் ஓவரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ள ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான உத்தேச டெல்லி கேபிட்டல்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச டெல்லி கேபிட்டல்ஸ் அணி:-
ஷிகர் தவான்,ப்ரித்திவி ஷா,ஸ்ரேயஸ் ஐயர்(C),ரிஷப் பண்ட்(WK),காலின் இன்கிராம்,கிறிஸ் மோரிஸ்,அக்சர் பட்டேல்,ராகுல் திவேதியா,காகிஷோ ராபடா,இஷாந்த் ஷர்மா, கீமோபால்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:-

கிறிஸ் லின்,சுனில் நரேன்,ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா,தினேஷ் கார்த்திக்(C&WK),சுபமன் கில்,ஆண்ட்ரே ரசூல்,பியூஸ் சாவ்லா,லோக்கி பெர்க்யூஷன்,பிரதீஷ் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சந்தித்த ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் இரு அணிகளும் தலா 185 ரன்கள் எடுக்க, அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் கொல்கத்தா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தா அணிக்கு சாதகமான அம்சமாகும். சுழற்பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்த்ரே ரஸ்செலின் ‘கதகளி’யைத்தான் தான் இப்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை களம் இறங்கிய ஆட்டங்களில் முறையே 49, 48, 62, 48, 50 ரன்கள் வீதம் எடுத்துள்ள ரஸ்செல் நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த (25 சிக்சர்) வீரராக வலம் வருகிறார்.
கிறிஸ் லின், சுனில் நரின், கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள கொல்கத்தா அணி, முந்தைய ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக வெறும் 108 ரன்னில் முடங்கிப்போனது. அந்த தோல்வியை மறந்து விட்டு உள்ளூரில் கோலோச்சுவதற்குரிய வியூகங்களை அந்த அணி வகுத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று இதுவரை 6 புள்ளி பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூரு சேலஞ்சர்சை சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ன்ஸ் அணி 4 நாள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் காண காத்திருக்கிறது. பந்து வீச்சில் துல்லியமாக யார்க்கர் வீசி மிரட்டும் காஜிசோ ரபடாவும் (11 விக்கெட்), பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் உள்ளிட்டோரும் நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் பார்ம் தான் கவலை அளிக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய தவான், அடுத்த 4 ஆட்டங்களில் சொதப்பினார்.

Sathish Kumar:

This website uses cookies.