கடைசி கட்டத்தில் டெல்லி அதிரடி: இக்கட்டான ரன் சென்னைக்கு இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்த 20 ஓவர்களின் முடிவில் 147 ரன்கள் எடுத்துள்ளது

ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. இம்ரான் தாஹிர், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:

1. பிரித்வி ஷா, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. கொலின் முன்றோ, 6. அக்சார் பட்டேல், 7. இஷாந்த் சர்மா 8. டிரென்ட் போல்ட், 9. கீமோ பால், 10. ரூதர்போர்டு, 11. அமித் மிஸ்ரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 147 ரன்கள் எடுத்துள்ளதுவிசாகப்பட்டினத்தில் ஏற்கெனவே விளையாடி வெற்றி பெற்ற அனுபவத்துடன் களமிறங்குகிறது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி.
கடந்த 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது.
தில்லியில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்திலும், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தியிருந்தது.
இருப்பினும், அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை பிருத்வி ஷாவும், ரிஷப் பந்தும் வெளிப்படுத்தினர்.
பிருத்வி ஷா, 38 பந்துகளில் 56 ரன்களும், ரிஷப் பந்த் 21 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தார்.
இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விஸ்வரூபம் எடுக்கக் கூடும் என்பதால் எதிரணி கவனமாக இருக்க வேண்டும்.
டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
அணியில் ரபாடா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வருகின்றனர் இந்த வேகப்பந்து வீச்சாளர்கள். கீமோ பாலும் சிறப்பாக பந்து வீசி ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைச் சந்தித்து வருவதால் அதிருப்தியில் இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி, தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களைக் குவித்தார்.
எனினும், சில ஆட்டங்களில் அவர் சோபிக்க தவறிவிட்டார்.
3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவை வீழ்த்தினால் முதன்முதலாக தில்லி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இறுதிச்சுற்றில் மும்பை அணியை எதிர்கொள்ளப்போவது சிஎஸ்கேவா அல்லது தில்லியா என்பது வெள்ளிக்கிழமை இரவு தெரிந்துவிடும்.

Sathish Kumar:

This website uses cookies.