டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பதை பின்வருமாறு காண்போம்.
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய லீக் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணி, ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அருண் ஜெட்லி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று எங்களுடைய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து, குவாலிஃபயர்-1ல் விளையாடும் வாய்ப்பு பெறும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 13 போட்டிகளில் 10 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏற்கனவே பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. சம்பிரதாயபடி இன்றைய போட்டியில் களமிறங்கி விளையாடுகிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவதால் தொடரை வெற்றியுடன் முடிக்கும் நோக்கத்திலும் இருப்பார்கள்.
இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வழக்கம்போல எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது.
இரு அணிகளின் இன்றைய பிளேயிங் லெவன்:
டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்):
டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(கீப்பர்), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.