20 வயது பையனை இறக்கும் டெல்லி… தமிழக வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுத்த ஹர்திக் பாண்டியா… டெல்லி அணி முதலில் பேட்டிங்!

டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இரு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பின்வருமாறு காண்போம்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் பலம்மிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பலத்துடன் இப்போட்டிக்கு வந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேநேரம் லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பிறகு தனது சொந்த மைதானத்திற்கு திரும்பியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இரு அணிகளும் பலம்மிக்கதாக காணப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியில் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஐபிஎல்-இல் இருந்து விலகிவிட்டார் என்பதால் இன்றைய பிளேயிங் லெவலில் அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் உள்ளே வந்திருக்கிறார். தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் உள்ளே வந்திருக்கிறார்.

டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ரோவ்மன் பவல் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு மாற்று வீரராக எடுக்கப்பட்ட, 20 வயதேயான அபிஷேக் போரல் பிளேயிங் லெவலில் எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் கீழே காண்போம்

டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்:

ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்பராஸ் கான் (கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அமன் கான், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா(கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்

Mohamed:

This website uses cookies.