டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
15வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக ராகுல் 77 ரன்களும், தீபக் ஹூடா 52 ரன்களும் எடுத்தனர்.
இதன்பிறகு 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் (3), ப்ரித்வி ஷா (5) போன்ற வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மிட்செல் மார்ஸ் (37), ரிஷப் பண்ட் (44) மற்றும் பவல் (35) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் இருந்த அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது சக்திக்கு மீறி போராடி கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் குவித்தாலும், 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
பரபரப்பான இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கவுதம் கம்பீர் கண்டபடி கத்திய வீடியோ;
லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சமீரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.