21 வருட மோசமான சாதனையில் இணைந்த துவக்க வீரர்! தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்!
21 வருட மோசமான சாதனையில் இணைந்துள்ளார் தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரர் டீல் எல்கர்.
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார்.
இதனை எதிர்கொண்ட டீன் எல்கர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து முதல் பந்தில் ஆட்டமிழந்த தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் டீன் எல்கர்.
இதற்க்கு முன்னர், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரும், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் இந்த மோசமான சாதனையை படைத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் கேரி கிர்ஸ்டன் அம்புரோஸ் வீசிய போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
ஆண்டர்சன் ‘150’
இன்றைய போட்டியில் பங்கேற்ற ஆண்டர்சனுக்கு இது 150வது டெஸ்ட் போட்டியாகும். 150 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் இவர் வசமே உள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் இருக்கிறார்.