இந்திய அணி முழு பலத்துடன் மீண்டு வரும்; முன்னாள் கிரிக்கெட் வீரர்  வீரர் நம்பிக்கை !!

இந்திய அணி முழு பலத்துடன் மீண்டு வரும்; முன்னாள் கிரிக்கெட் வீரர்  வீரர் நம்பிக்கை

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து தகுதி பெறும் அணியுடன் இந்திய அணி விளையாடி அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இப்படி ஷெட்யூல் போட்டால் பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றி பெறக் கூடாது என்பதற்காக போடுகிறீர்களா, உடனே ஷெட்யூலை மாற்றுங்கள் என்று ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை வெளியான உடனேயே அதிரடி வீரர் சேவாக் காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அதிகாரபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் இது குறித்த புரமோஷன் வீடியோ ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் நிகழ்ச்சிக்கிடையே ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் பேசிய போது:

நாங்கள் விளையாடும்போது நிறைய அடுத்தடுத்த நாட்களில் ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறோம். இப்போது ஏன் வீர்ர்கள் புகார் பாடுகின்றனர்? 5 நாட்கள் கிரிக்கெட் ஆடுவதில்லையா? இங்கிலாந்தில் ஒரு முறை நாங்கள் 11 நாட்கள் தொடர்ச்சியாக 3 முறை ஆடியிருக்கிறோம்.

இதனால் இந்தியா தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதில் நான் எந்தப் பிரச்சினையையும் பார்க்கவில்லை. களைப்பு ஒரு பிரச்சினை இருக்கிறாது, ஆனால் இப்போது ஆடுபவர்களெல்லாம் அத்லெட்டிக் வீரர்கள் போன்றவர்கள், நம்ப முடியாத அளவுக்கு உடற்தகுதி வைத்திருக்கின்றனர். ஆகவே ஒன்றும் ஆகாது, யாரும் செத்துவிடமாட்டார்கள்.

இவ்வாறு கூறினார் டீன் ஜோன்ஸ். இவர் கூறியிருப்பது சேவாகின் காட்டமான ட்வீட்டுக்குப் பதில் அளிப்பது போல் உள்ளது.

மேலும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் படுதோல்வி குறித்து பேசிய டீன் ஜோன்ஸ், இந்திய அணிக்கு இது கடினமான காலம், தவறுகளை சரி செய்து கொண்டு இந்திய அணி விரைவில் முழு  பலத்துடன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Mohamed:

This website uses cookies.