மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் உடனான திருமணம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி எரின் ஹோலண்ட் முடிவு

CANBERRA, AUSTRALIA - FEBRUARY 13: Erin Holland arrives at the Qatar Airways Canberra Launch gala dinner on February 13, 2018 in Canberra, Australia. (Photo by Lisa Maree Williams/Getty Images for Qatar Airways)

ஆஸ்திரேலியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் கட்டிங் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து பல கேள்விகள் எழ அதற்கு எரின் பதில் அளித்துள்ளார்.

பென் மற்றும் எரின் இருவரும் கடந்த சில மாதங்களாக பதினொன்றாம் சீசனுக்காக இந்தியாவில் தங்கியிருந்தனர். அப்பொழுது கேட்டதுபோது. நான் நண்பர்களின் திருமண நிகழ்ச்சியில் பாடுவதையே விரும்புவதாகவும் எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த சீசனில் சில போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனதிர்காக தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் மும்பை அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கையும் இவர் சில காலம் இயக்கிக்கொண்டிடுத்தார். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து மகிழ்விக்க இந்த பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.

என்னதான் நீண்டகாலம் இருவரும் ஒருவருக்கோருவர் டேட் செய்துகொண்டிருந்தாலும், எரின் திருமணத்தில் எந்தவித ஆர்வமும் இல்லை என மறுத்துள்ளார். 

தான் கிரிக்கெட் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், தந்தை மற்றும் சகோதரர் இருவரும் கிரிக்கெட் வீரேகளே என்றும், இருந்தபோதிலும் எனக்கு அதில் பெரும் ஆர்வம் இல்லை என பதிவிட்டுள்ளார். பென் ஆடுகையில் நான் சற்று விரும்பி பார்ப்பேன் ஆனால் இப்பொழுது அதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பென் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றாலும் என்னுடன் தொடர்பில் இருப்பார். என்னுடைய இந்த முடிவால் எங்கள் நட்பில் எந்தவித பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்

Vignesh G:

This website uses cookies.