ஹர்திக் பாண்டியாவிற்கு காயம்; அணியில் இடம்பெற்றார் தீபக் சாஹர் !!

ஹர்திக் பாண்டியாவிற்கு காயம்; அணியில் இடம்பெற்றார் தீபக் சாஹர்

பாகிஸ்தான அணியுடனான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது போட்டியின் 18வது ஓவரை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரின் ஐந்தாவது பந்தை வீசிய போது பாண்டியாவில் முதுகுப் பகுதியில் வலி (lower back injury) ஏற்பட அப்படியோ மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் எழுந்து நடந்துள்ளார். அவரது காயம் குறித்து மெடிக்கல் குழு மதிப்பிட்டு வருவதாக பி.சி.சி.ஐ., அறிவித்தது.

ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மதிப்பிட்டு வரும் மருத்துவ குழு, அவருக்கு சில நாட்கள் ஓய்வு தேவை அவரால் தற்போது விளையாட முடியாது என கூறும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பையில் இருந்து விலகும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் ஒருவேளை ஹர்திக் பாண்டியா தொடரில் இருந்து விலகினால் அவருக்கு மாற்று வீரராக அணியில் இணைய இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பி.சி.சி.ஐ., அழைப்பு விடுத்துள்ளது. தீபக் சாஹர் இன்று துபாய் சென்று இந்திய அணியில் இணைவார் என்று தெரிகிறது.

ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்தடுத்து இரண்டு வெற்றியை ருசித்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை மாலை (21.09.18) நடைபெறும் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது, அடுத்ததாக 23ம் தேதி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Mohamed:

This website uses cookies.