ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு டெல்லி அணியில் வீரர்களின் மத்தியில் இருக்கும் மாற்றங்களுடன், புதிய பட்டியலை காண்போம்.
டெல்லி அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக இரண்டு முக்கிய வீரர்களை வர்த்தகம் எனும் முறை மூலமாக வாங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் அணியின் நீண்டகால வீரராக இருந்த ரஹானேவை வாங்கியது.
இந்நிலையில், ஏலத்தில் டெல்லி அணி 27.85 கொடியுடன் பங்கேற்றது. பல வீரர்களுக்கு டெல்லி அணி போட்டியிட்டது. மார்கன், கம்மின்ஸ், பின்ச், மோரிஸ் போன்ற முக்கிய வீரர்கள் டெல்லி அணியின் பட்டியலில் இருந்தனர்.
ஆனால், அவர்கள் அதிகவிலைக்கு சென்றதால், டெல்லி அணியில் அவ்வளவு தொகை கொடுக்க இயலவில்லை. இருப்பினும், விண்டீஸ் வீரர் ஹெட்மயரை 7.75 கோடிக்கு வாங்கியது. பின்னர் ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரியை 2.40 கோடிக்கு வாங்கியது.
ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஸ்டைனிஸ் 4.80 கோடிக்கும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜேசன் ராய் இருவரும் ஆரம்பவிலையான தலா 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். மிகக்குறைந்த விலைக்கு இவர்கள் எடுக்கப்பட்டது அதிஷ்டமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி வீரர்கள் விபரம்:
பேட்ஸ்மேன்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், ஜேசன் ராய்
பந்துவீச்சாளர்கள்: இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், சந்தீப் லாமிச்சேன், ககிசோ ரபாடா, கீமோ பால், மோஹித் சர்மா, லலித் யாதவ்
ஆல்ரவுண்டர்கள்: ஆக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஆர் அஸ்வின், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ்
விக்கெட் கீப்பர்கள்: ரிஷாப் பந்த், அலெக்ஸ் கேரி, சிம்ரான் ஹெட்மியர்