பெங்களூர் அணி எங்களுக்கே ஒரு மேட்டரே கிடையாது; டெல்லி வீரர் கெத்து பேச்சு
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியே வெல்லும் என டெல்லி அணியின் நட்சத்திர வீரரான அன்ரிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
அடுத்தடுத்த அசத்தலான வெற்றிகளை சந்தித்து வரும் இரண்டு அணிகள் மோதும் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி அணியே வெல்லும் என டெல்லி அணியின் அன்ரிச் நார்ட்ஜே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்ரிச் பேசுகையில், “பெங்களூர் அணி சமபலம் கொண்ட அணியாக உள்ளது. பெரிய பெரிய வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நிச்சயமாக பெங்களூர் அணியுடனான போட்டி சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. பெங்களூர் அணியை வீழ்த்துவது கடினம் தான் என்றாலும், நாங்களும் ஒரு அணியாக சமபலம் பெற்றுள்ளோம். கடுமையாக பயிற்சியும் மேற்கொண்டுள்ளோம். நிச்சயமாக எங்களால் பெங்களூர் அணியை வீழ்த்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.