இன்றைய போட்டியில் களம் இறங்கப் போகும் டெல்லி அணி இதுதான்!

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இன்றுடன் இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிடும். இன்று யார் இந்த வருடத்தின் சாம்பியன் என்று தெரிந்து விடும். இதற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் போல் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி இறுதிப்போட்டிக்குள் அற்புதமாக நுழைந்துவிட்டது. டெல்லி அணியை எடுத்துக்கொண்டால் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்று தோல்வி அடைந்து தான் முன்னேறியது.

மும்பை அணியில் ஒரு சிலர் காயமடைந்து இருந்தாலும் அந்த அணி தற்போதும் கூட ஒரு அற்புதமான ஆக்ரோஷமான அணியாக தான் இருக்கிறது. டெல்லி அணியை பொறுத்தவரை அது ஒரு இளம் வீரர்கள் கொண்ட படை ஸ்ரேய்ஸ் ஐயர் கேப்டனாக இருக்க ரிஷப் பந்த் மார்க்கஸ் போன்ற பல இளைஞர்கள் இருக்கின்றனர். துவக்க வீரர்களாக வரும் இருவரும் அடித்து அடைந்தால் மட்டுமே அந்த அணிக்கு ஓரளவிற்கு கிடைக்கும் இல்லையென்றால் அந்த அணி அப்படியே பல போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சை பொறுத்தவரை ககிசோ ரபடா 29 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதுதான் அவருடைய அதிக விக்கெட்டுகள் ஆகும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் எடுத்த அதிக விக்கெட்டுகள் எண்ணிக்கை இதுதான். டெல்லி அணி விளையாட போகும் முதல் இறுதிப் போட்டி இதுதான். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. தற்போது என்று விளையாட போகும் டெல்லி அணியின் உத்தேசமான அணியை பார்ப்போம்.

சாத்தியமான லெவன்: ஷிகர் தவான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், சிம்ரான் ஹெட்மியர், ஆக்சர் படேல், ஆர் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, பிரவீன் துபே / ஹர்ஷல் படேல்

Prabhu Soundar:

This website uses cookies.