ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு பல்வேறு அணிகள் தங்கள் தரப்பில் இருந்த வீரா்களை தக்க வைத்தும், பலரை விடுவித்தும் உள்ளன.
வீரா்கள் பரிமாற்றத்துக்கான கடைசி நாள் வியாழக்கிழமை ஆகும். இந்நிலையில் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை பரிமாறிக் கொண்டன.
ராஜஸ்தான் அணியில் 24 ஆட்டங்களுக்கு தலைமை தாங்கிய ரஹானே, அதிகபட்சமாக 2810 ரன்களை அடித்துள்ளாா். 2 சதம் மற்றும் 17 அரை சதங்களை ராயல்ஸ் அணிக்காக விளாசியுள்ளாா். எனினும் கடந்த 2019 சீசனில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டாா். அவருக்கு ரூ.4 கோடி விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அவா் தில்லிக்கு இடம் மாறியுள்ளாா்.
கடந்த 12-ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டாா் மயங்க் மாா்கண்டே. மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக ஆடிய நிலையில் இந்திய டி20 அணியிலும் இடம் பெற்றாா்.
Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS
ராஜஸ்தான் அணியில் முதலில் ஆடத் தொடங்கிய ராகுல் தேவதியா பின்னா் பஞ்சாப், தில்லி அணிகளில் ஆடி தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே திரும்பியுள்ளாா். பஞ்சாப் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.
தில்லி கேபிடல்ஸில் 9 போ் விடுவிப்பு:
தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மன்ஜோத் கல்ரா, அன்குஷ் பெயின்ஸ், நாது சிங், பண்டாரு அய்யப்ப உள்ளிட்ட 6 இந்திய வீரா்களும், கிறிஸ் மோரீஸ், காலின் இங்கிராம், காலன் மன்றோ உள்ளிட்ட 3 வெளிநாட்டு வீரா்களும் விடுவிக்கப்பட்டனா்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்னிவேஷ் ஆயச்சி, ஆன்ட்ரு டை, டேவிட் மில்லா், மொசஸ் ஹென்ரிக்ஸ், பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், வருண் சக்கரவா்த்தி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 1. கிறிஸ் மோரிஸ், 2. கொலின் முன்ரோ, 3. ஹனுமா விஹாரி, 4. அங்குஷ் பெய்ன்ஸ், 5. கொலின் இங்க்ராம் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.