இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கவதம் கம்பிர். தற்போது இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் அற்புதமாக ஆடி வருகிறார். தற்போது டெல்லி அணிக்காக கவுதம் அம்பிர் 2.8 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.!
மேலும் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளார் கௌதம் கம்பிர்.
ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் என வரிசையாக ஏலம் விட்ட பின்னர், விக்கெட் கீப்பர்கள் ஏலம் விடப்பட்டார்கள். அனைத்து அணிகளும் விக்கெட் கீப்பர்களை ஏலம் எடுக்க விரும்பினார்கள். இதனால் ஒவ்வொரு வீரர்களும் கோடிகளை தாண்டினார்கள்.
குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடந்த முறை குஜாராத் அணிக்காக 2.3 கோடி ரூபாய் ஏலம் போன, அவரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த முறையை விட தினேஷ் கார்த்திக்குக்கு 5.1 கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும்.
1 கோடி ரூபாய் அடிப்படை விலையான சஞ்சு சாம்சனை 8 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. ராபின் உத்தப்பாவை 6.4 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது.
அம்பதி ராயுடுவை 2.2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஜோஸ் பட்லரை 4.4 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.
தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டான் டி காக்கை 2.8 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சகாவை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது