தேவ்தத் படிக்கல் நிச்சயமாக வருங்காலத்தில் இந்திய அணிக்காக களம் இறங்குவாரா அதில் எந்தவித சந்தேகமும் இல்லை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் படிக்கல் குறித்து சில நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறி இருக்கிறார். கண்டிப்பாக வருங்காலத்தில் இந்திய அணிக்காக அவர் நிச்சயம் விளையாடுவார் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை ஏன் இந்திய டெஸ்ட் போட்டிகளில் இன்னும் களம் இறக்க படவில்லை என்பது குறித்தும் கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் உரிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் ஆவேஸ் கான் இடம்பெற்றிருந்தார், ஆனால் படிக்கல் இடம் பெறவில்லை. படிக்கல் ஏன் இடம் பெறவில்லை என்பது குறித்து எம்எஸ்கே பிரசாத் சமீபத்தில் விளக்கியுள்ளார்.
இன்னுமொரு ஆண்டு அவருக்கு தேவைப்படுகிறது
இருபது வயதே ஆன படிக்கல் ஒரு ஆட்டங்களில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 450 ரன்கள் குவித்து சென்ற ஆண்டுக்கான சிறந்த எமர்கிங் பிளையேர் என்கிற விருதை அவர் தட்டிச் சென்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்துமுடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடர்கள் 727 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஒரு சதம் அடித்து அசத்தினார். நிச்சயமாக இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்திய அணிக்காக தற்பொழுது அவர் உடனடியாக வந்து விளையாடி விட முடியாது. நிச்சயமாக டெஸ்ட் அணிக்கும் அவர் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுகிறது. எனவே வருங்காலத்தில் அவர் இந்திய அணியில் நிச்சயம் களமிறங்குவார் அதில் எந்தவித சந்தேகமும் மாற்றுக்கருத்தும் இல்லை என்று எம்எஸ்கே பிரசாத் விளக்கினார்.
ஆவேஸ் கான் சேர்த்தது குறித்து விளக்கம்
ஸ்டாண்ட் பை வீரர்களாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆபீஸ் கான் உட்பட நான்கு வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரசித் கிருஷ்ணா போல ஆவேஸ் கான் மிக வேகமாக பந்து வீச கூடியவர். ஐபிஎல் தொடர்களில் சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசினார். அதிலும் குறிப்பாக 148 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசி நாம் பார்த்தோம். எனவே அவரை ஸ்டாண்ட் பை வீரராக இங்கிலாந்துக்கு கொண்டு செல்வது சரி எனப்பட்டது.
அங்கே இருக்கும் தட்ப நிலைகளுக்கு அவர் நிச்சயம் கை கொடுப்பார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் நிச்சயம் உதவுவார் என்பதன் அடிப்படையில் அவர் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இணைக்கப் பட்டுள்ளார் என்று எம்எஸ் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.