தோனி லாக்டவுன்ல இதுக்கு மிகவும் அடிமையாகிவிட்டார் – சாக்சி ஓபன் டாக்!

தோனி லாக்டவுன்ல இதுக்கு மிகவும் அடிமையாகிவிட்டார் – சாக்சி ஓபன் டாக்!

இத்தகைய ஊரடங்கு காலத்தில் தோனி இந்த ஒன்றிக்கு முழுமையாக அடிமையாகிவிட்டார் என அவரது மனைவி நேரலையில் உரையாடியபோது மனம்திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குப்பிறகு எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. 13வது ஐ.பி.எல். தொடருக்காக சென்னை வந்த அவர் சேப்பாக் மைதானத்தில் சிலநாட்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது வீட்டில் உள்ள தோனி, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருவதை புகைப்படம் வாயிலாக நாம் கண்டோம்.

இதனிடையே சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் மனைவி சாக்சி நேரலையில் உரையாடினார். அப்போது தோனி வீட்டில் என்ன செய்கிறார் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாக்சி கூறியதாவது,

“அதிகமாக வீடியோ ‘கேம்’ விளையாடுகிறார். இது அவரது மனதை திசை திருப்ப உதவுகிறது. இப்போதெல்லாம் தோனியின் பப்ஜி விளையாட்டு, எனது படுக்கையை ஆக்கிரமித்து விட்டது.

தூக்கத்தில் கூட பப்ஜி குறித்து தான் பேசுகிறார்.  இவர் 9 பைக்குகள் வைத்துள்ளார். இவற்றை கழற்றிவிட்டு தேவையான புதிய பாகங்களை வாங்கி மீண்டும் முழுமையாக பொருத்தினார்.”

மேலும் பேசிய அவர், தோனி எந்த விஷயத்திலும் அமைதியாக இருப்பார். நான் மட்டுமே அவரை அப்செட் செய்ய முடியும். அவரது கோபத்தை துாண்ட முடியும். இதனால் அவர் என்மீது கோபத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் நான் மட்டுமே அவருக்கு நெருக்கமானவராக உள்ளேன். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒருவருக்கு ஒருவர் குறித்து நன்கு தெரிந்து வைத்திருப்போம். மற்றபடி யாரும் அவருடன் சண்டையிட மாட்டர். நான் மட்டும் தான் சண்டையிடுவேன். என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.