இந்திய அணியில் தோனி ஏன் இன்னும் நீடிக்கிறார் என்ற கேள்வி அவ்வவ்போது எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய போட்டியில் தன்னுடைய திறமையால் தோனி பதில் அளித்துள்ளார். கேப்டன்ஷிப்பில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்த தோனி, தான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதையும் இன்றளவும் நிரூபித்து வருகிறார். ஸ்டம்பிற்கு பின்னாள் இருக்கும் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு ஸ்பெஷல். ஒன்று டிஆர்எஸ் என்றும் ரிவிவ் கேட்பதற்கு. மற்றொரு மின்னல் வேக ஸ்டம்பிங்.
இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இரண்டு ஸ்டம்பிங் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். அதில், 41வது ஓவரின் கடைசி பந்தில் லிடன் தாஸை தோனி செய்த ஸ்டம்பிங் ரசிகர்கள்களை வியக்க வைத்துவிட்டது. சதம் விளாசி இந்திய அணி நெருக்கடி கொடுத்து கொண்டு இருந்தவர் லிடன். கடைசி வரை அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வங்கதேசம் 250 ரன்களை கடந்து இருக்கும்.
ஆனால், லிடன் அசந்த நேரத்தில் தோனி ஸ்டம்பிங் செய்துவிட்டார். மிகவும் துல்லியமான நூலிழையில் அவுட் ஆனார் லிடன். மூன்றாவது அம்பயரை நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு தான் அவுட் என்பதை அறிவித்தார். தோனி 0.16 செகண்ட் வேகத்தில் ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஒருபுறம் லிடன் அதிரடியாக விளையாட, மறுபுறம் மிரஸ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரிடன் சிறப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களில் வங்கதேசம் அணி 100 ரன்களை எட்டியது. புவனேஸ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா என அனைவரும் பந்துவீசி பார்த்துவிட்டார்கள். ஆனால், விக்கெட் விழவேயில்லை. வழக்கம் போல் பகுதி நேர பந்துவீச்சாளரான கேதர் ஜாதவ் அழைக்கப்பட்டார். உடனடி பலன் கிடைத்தது.
120 ரன்களுக்கு தான் முதல் விக்கெட் விழுந்தது. 32 ரன்களுக்கு மிரஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர் ஒற்றை இலக்க ரன்னில் வந்த உடன் நடையை கட்டினார்கள். இருப்பினும் தனி ஆளாக லிடன் தாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்ததால் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய அவர் பின்னர் நிதானமாக விளையாடினார். இருப்பினும் அவரும் 121 ரன்னில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
வங்கதேசம் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 3, கேதர் ஜாதவ் 2 விக்கெட்களை சாய்த்தனர். பும்ரா, சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 3 ரன் அவுட் செய்யப்பட்டது. இதனையடுத்து 223 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
3.தோனி – 800 டிஸ்மிஷல்ஸ்
510 முறை சர்வதேச போட்டிகளில் கீப்பராக பணியாற்றியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 800 டிஸ்மிஷல் செய்துள்ளார். கேட்ச், மற்றும் ஸ்டம்பிங் என அனைத்தும் சேர்த்து மொத்தம் 800 முறை பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.