6 ஓவர்ல 63 ரன்… நானே கொஞ்சம் பதட்டமா தான் இருந்தேன்.. ஆனா தோனி சொன்ன வார்த்தை…? மிரட்டல் பவுலிங் குறித்து பேசிய பதிரானா !!

6 ஓவர்ல 63 ரன்… நானே கொஞ்சம் பதட்டமா தான் இருந்தேன்.. ஆனா தோனி சொன்ன வார்த்தை…? மிரட்டல் பவுலிங் குறித்து பேசிய பதிரானா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் தொடரின் 29வது போட்டியில் சென்னை அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும், தோனி 20 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் 63 ரன்களை அசால்டாக குவித்தது. இதனால் பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியை போலவே இந்த போட்டியில் மும்பை அணி அசால்டான வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில், போட்டியின் 8வது ஓவரை வீசிய பதிரானா ஒரே ஓவரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கிய சென்னை வீரர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் பதிரானா 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மதீஷா பதிரானா போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய பதிரானா, தோனி கொடுத்த நம்பிக்கை தனது சிறப்பான பந்துவீச்சிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிரானா பேசுகையில், “பவர்ப்ளே ஓவரின் போது நாங்கள் அதிகமான ரன்களை வழங்கியதால் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன், ஆனால் தோனி என்னிடம் இருந்து பதட்டம் இல்லாமல் இருக்கும்படி கூறினார். பதட்டமோ, பயமோ இல்லாமல் உனது வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றே எனக்கு அறிவுறத்தப்பட்டது, இதுவே எனக்கு புதிய நம்பிக்கையையும் கொடுத்தது. நான் முடிவுகளை பற்றி பெரிதாக யோசிப்பவன் கிடையாது, எனது வேலையை சரியாக செய்வதில் மட்டுமே கவனத்தை செலுத்துனேன். எனது வேலையை சரியாக செய்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என நம்புவேன். போட்டியின் தன்மைக்கு ஏற்பவும், எதிரணி பேட்ஸ்மேனுக்கு ஏற்பவும் சில நேரங்களில் திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.