என் மீது கடும் கோபமடைந்த தோனி!! போட்டி முடிந்த பின்னர், கட்டிப்பிடித்து வாழ்த்தினார் – சஹார் நெகிழ்ச்சி..

சனிக்கிழமை, சென்னையில் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில்,பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் ஸபின்னர்கள் அற்புதமாக செயல்பட்டனர்.

இப்போட்டியில், வழக்கம் போல சஹர் 4 ஓவர்களை பவர் பிளே ஓவர்களில் முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 3 ஓவர்கள் முடித்து மீதமுள்ள ஒரு ஓவரை கடைசியில் உபயோகிக்கலாம் என விடப்பட்டது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

நடுத்தர ஒவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி விட்டு சென்றனர்.  இறுதியில்,கடைசி இரு ஓவர்களை வேகப்பந்துவீச்சுக்கு செல்லும் நிலை வந்தது.

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது, டோனி 19 வது சஹாரிடம் பந்தை பந்து ஒப்படைத்தார். சஹார் முதல் இரண்டு பந்துகளை நோ பாலாக வீச ஆத்திரமடைந்த தோனி சஹாருக்கு கோபத்துடன் வந்து அறிவுரை கூறினார்.

 

பின்னர் போட்ட நான்கு பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தி ஆட்டத்தை சென்னை அணி பக்கம் மீண்டும் கொண்டு வந்தார். இறுதி ஓவரை வீசிய குகளின் 3 ரன்களை மட்டுமே கொடுத்து அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல செய்தார்.

 

போட்டி முடிந்த பின்னர் தோனி என்ன கூறினார் என்பது பற்றி சஹர் கூறினார்.

“டோனி பாய் என்னிடம் வந்தார், அவர் புன்னகையுடன் என்னை கட்டிப்பிடித்து, நன்றாக பந்துவீசினாய் என்றார், நான் இரண்டு மோசமான பந்துகளை வீசி நிலையை இழந்தேன், ஆனால் உடனடியாக மீண்டும்என் நிலைக்கு வந்தேன் , அவர் (டோனி) என்னை ஊக்கப்படுத்தினார், போட்டியில் நான் எனது அணி வெற்றியில் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சாஹார் பின்னர் முழு சம்பவத்தையும் விவரித்தார்.

“நான் மிதமான பந்தை வீசி பேட்ஸ்மேன் விட்டுவிட முயற்சி செய்தேன். ஆனால், அது பனி காரணமாக தவறாக போய் முடிந்தது. மேலும், இரண்டாவது பந்தையும் மோசமாக வீசியதால் தோனி கோபமடைந்து எனக்கு உத்வேகத்தை கொடுத்து சரியாக வீச சொன்னார். வேறு யாரவது இருந்தால் என்னை பந்துவீச்சில் இருந்து வெளியேற்றி இருப்பர். தோனி என்னை வழிநடத்தினார் ,” சஹார் கூறினார்.

பஞ்சாப் அணியை வென்றதன் மூலம் 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று சென்னை அணி இரண்டாம் இடத்தில உள்ளது. கொல்கத்தா அணி ரன் ரேட் விகிதத்தில் சிறப்பாக ஆடி முதலிடத்தில் நீடிக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.