இதான் கடைசி இதான் கடைசி ஐபிஎல்-ன்னு 3 வருஷமா கேட்டுட்டு இருக்கேன்… தோனி முன்னைவிட இப்போ இன்னும் பயங்கர ஃபிட்டா இருக்கார்; – ரோகித் சர்மா பேச்சு!

மகேந்திர சிங் தோனி இந்த வருடம் இன்னும் ஃபிட்டாக இருக்கிறார். கண்டிப்பாக அடுத்த 2-3 வருடங்களுக்கு விளையாடுவார் என்று கருத்து தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது.

தொடர்ந்து 14ஆவது சீசனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டன் பொறுப்பேற்று விளைளையாடுகிறார். கடந்த சீசனில் முதல் பாதியில் ஜடேஜா கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். தொடர் தோல்விகள் காரணமாக அவர் விலகிக்கொண்டதால் மீதிப்பாதியில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து கேப்டன் பொறுப்பில் தோனி விளையாடுகிறார்.

4 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றனர். 41 வயதாகும் தோனி இந்த சீசனுடன் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு வந்த தோனி, பொது நிகழ்வில் பேசியபோது, சேப்பாக்கம் மைதானத்தில் தான் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி இருக்கும். அதன்பிறகே ஓய்வு பெறுவேன் என்று கூறினார். அது இந்த சீசனாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் மற்றொரு வெற்றிகரமான அணியாக திகழ்ந்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரண்டு சீசனங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டது. குறிப்பாக கடந்த சீசனில் புள்ளிப்பட்டியல் கடைசி இடத்தைப்பெற்று பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மும்பை அணிக்கு முதல் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக நடக்கிறது. இதற்கிடையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் பங்கேற்றனர். அப்போது பல கேள்விகளுக்கு ரோகித் சர்மா பதில் அளித்தார். அதில் ஒரு நிருபர், “தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். அப்போது பதிலளித்த ரோகித்,

“கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இதே செய்தியை நான் கேள்விப்பட்டு வருகிறேன். தோனியின் உடல்தகுதி பற்றி சொல்லவே வேண்டாம். இந்த வருடமும் மிகவும் ஃபிட் ஆக இருக்கிறார். கண்டிப்பாக அடுத்த 2-3 வருடங்கள் ஒரு விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.” என தோனி குறித்து வெளிப்படையாக பேசினார்.

Mohamed:

This website uses cookies.