தோனி அவுட் இல்லை? இந்திய ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய அம்பையர்கள்! சமூக வலை தளங்களில் சர்ச்சை!

தோனி அவுட் இல்லை இந்திய ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய அம்பையர்கள்

இந்த உலக கோப்பை தொடரில் அம்பையர்கள்களின் தரத்தை பார்த்தால் நாம் அனைவரும் காரித்துப்பும் படியாகவே இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் அம்பயர்கள் மீண்டும் மீண்டும் கண்ணை கட்டிக்கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் என்றே தெரிகிறது. தற்போது இந்திய ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் குறிப்பாக ஜாம்பவான் தோனிக்கும் நடந்துள்ள விஷயம் சிறிய விஷயம் அல்ல.

தற்போது நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான செமி பைனல் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. இந்த போட்டியில் ஒற்றை இலக்கங்களுக்கு பல விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த இந்திய அணியை வழக்கம்போல் தோனி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் போராடி வெற்றிப் பாதை அருகே அழைத்துச் சென்றனர்

ஒரு கட்டத்தில் ஜடேஜா தனது விக்கெட்டை இழக்க, கடைசி 2 ஓவர்களில் 32 தேவைப்பட்டது. வழக்கமாக 40 முதல் 50 ஓவர் வரை மூன்றாவது பவர் பிளே அமலில் இருக்கும் இந்த பவர் பிளேவின் போது வட்டத்திற்கு வெளியே அதாவது 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே 5 பில்டர்கள் தான் நிற்க வேண்டும்

ஆனால் அதற்கு மாறாக எதிர் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆறு பீல்டர்களை நிறுத்தி இருந்தார். இது குறிப்பாக நாட்-ஏ-பால் கொடுக்கப்படும். இந்த பீல்டிங் வைத்தற்கு அடுத்த பந்து ஒரு ரன் அவுட் ஆகி விடுவார் தோனி.

வழக்கம்போல் அவர்கள் இந்த ஆறு வீரர்களை கவனிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு இந்திய ரசிகர்களையும், விடை பெறப் போகும் தோனியையும் ஏமாற்றியுள்ளனர். இது ஒரு ஏமாற்றம் அல்ல, 130 கோடி மக்களின் உலக கோப்பை கனவை சிதைக்கும் மோசமான, அம்பையர்களின் தரமில்லாததனமாகும். இதனை சமூக வலைதள வாசிகள் கடுமையாக விமர்சித்தும் ஐசிசியிடம் நியாயம் கேட்டும் ட்விட் செய்துவருகின்றனர்.

இந்த இடத்தில் பீல்டர்கள் சரியாக நின்றிருந்தால், அதாவது வெளியே 5 பேர் நின்றிருந்தால் ரன் அவுட் செய்த மார்டின் கப்டில் இடம் மாறி இருப்பார் அவரது சரியாக விழுந்திருக்க வாய்ப்பில்லை வேறு ஒரு நின்றிருந்தாலும் தோனி தப்பியிருப்பார். மேலும் , இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும். பைனலுக்கு சென்று அழகாக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் மோசமான அம்பயர்கள் மீண்டும் மீண்டும் கிரிக்கெட்டை படுத்தி வருகின்றனர் பாழ்படுத்தி வருகின்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.