தீபக் சகார் விசய்த்தில் தல சொன்னது.. அப்படியே நடக்குது !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் தீபக் சாஹர். இளம் வேகப்பந்துவீச்சாளர். தற்போது இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக் கும் தீபக், இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு தொடரிலும் பயிற்சி ஆட்டத்திலும் அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்! வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக கடந்த 25-ம் தேதி நடந்த போட்டியில் அவர் வீழ்த்தியது 5 விக்கெட்!

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பும்ரா விலக, அதிர்ஷ்டம் அழைத்திருக்கிறது தீபக்கை! இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு பதில் தீபக்! 

‘ஐபிஎல் போட்டியில சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போதே, தீபக்கின் திறமை தெரிந்தது. அப்பவே அவருக்கு இந்திய அணி யில் இடம் கிடைக்கும்னு நினைச்சோம். இப்போ அது நடந்தே விட்டது’ என்கிறார்கள் தீபக் சாஹரின் நண்பர்கள்.

முந்தைய ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக ஆடிய தீபக் சாஹர் அதிகம் கவனிக்கப்படவில்லை என்றாலும் ரஞ்சி போட்டியிலும் செய்யது முஷ்டாக் அலி டிராபிக் போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய தீபக் ஆச்சரியப்படுத்தினார், ஸ்விங்கில்! பிறகுதான் சிஎஸ்கே இழுத்துக்கொண்டது.

இப்போதில்லை. ரஞ்சியில் அறிமுகமான போட்டியிலேயே மிரட்டியவர் தீபக். எட்டு வருடத்துக்கு முன் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் தீபக், வெறும் 10 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி அசர வைத்தார். அப்போது அவருக்கு 18 வயசுதான்! ஆனால், இப்போதுதான் அவருக்கு சரியான நேரம் வந்திருக்கிறது. திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம்!

‘இப்போ இங்கிலாந்துல இருக்கும் தீபக், ஏ அணிக்காக நடக்கும் முத்தரப்பு தொடர்ல 2 போட்டியில ஏழு விக்கெட் வீழ்த்தியிருக்கார். பயிற்சி ஆட்டத்துல ஆறு விக்கெட் எடுத்திருக்கார். எனக்கு போன் பண்ணினார். இங்குள்ள கண்டிஷன் எனக்கு சரியா இருக்குன்னு சொன்னார். அவ ரோட ’ரிவர்ஸ் ஸ்விங்’ அங்க நல்ல வொர்க் அவுட் ஆகுது. கண்டிப்பா இங்கிலாந்தில் சாதிப்பார்’ என்கிறார் தீபக்கின் பயிற்சியாளர் நவேந்து தியாகி.

Editor:

This website uses cookies.