மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை என்னிடம் கேட்காதீர்கள் என மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜொனி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்
இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத காலம் விடுப்பு எடுத்து ராணுவ பயிற்சிக்காக சென்றார். அதன்பிறகு அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மேலும் இரண்டு மாத காலம் விடுப்பு எடுத்து தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நிச்சயம் இவருக்கு இடம் இருக்கும் என ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் கூட தோனி இடம்பெறவில்லை. இதனால், அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.
இதற்க்கு இடையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளிக்கையில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தோனி பங்கேற்றபோது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே, “ஜனவரி வரை என்னிடம் கேட்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
தோனியின் எதிர்காலம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி, தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பார்” என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics
இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த துவக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக வெளியேறியுள்ளார் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.