2004 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிய தல தோனி தற்போது திடீரென்று ஓய்வு பெற்று விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
தற்போது திடீரென தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், உங்களது அன்பிற்கும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்று விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இது போன்ற கேள்விகள் அவரிடம் வந்து கொண்டே இருந்தது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாகவே தனது சொந்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் .
தல தோனி இந்நிலையில் தற்போது திடீரென்று இவ்வாறு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தல தோனி எப்போதும் நாம் நினைக்காததை செய்யக்கூடிய தன்மை படைத்தவர். அப்படித்தான் தற்போதும் செய்திருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட உடனேயே அவரது பெயர் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் துவங்கி விட்டது.
இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள 5876 ரன்கள் குவித்துள்ளார். 33 அரை சதங்களும் 6 சதங்களும் அடித்துள்ளார் அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று எனக்கு பிடித்த ஒரு நாள் போட்டிகளில் 350 முறை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் 10 ஆயிரத்து 773 ரன்கள் அடித்து இருக்கிறார். 73 அரை சதங்களும் இதில் அடங்கும் அதிகபட்சமாக 183 ரன்கள் விளாசி இருக்கிறார். 98 டி20 போட்டிகளில் ஆடி 1617 ரன்களும் இரண்டு அரை சதங்களும் அடித்திருக்கிறார்
.ஐபிஎல் தொடரில் 190 போட்டிகளில் ஆடி 4432 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் 23 அரை சதங்களும் அடங்கும் தற்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பாணியிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். அனைவரும் மிகப்பெரிய ஒரு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர் ஆனால் தனது எளிமையை மீண்டும் நிரூபித்துள்ளார் தல தோனி.