இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனவே, அதே உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் காணும். மறுபுறம், டெஸ்ட் தொடரில் இழந்த வெற்றியை ஒருநாள் தொடரில் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை உள்ளது.
விராட் கோலிக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா அணிக்கு தலைமை தாங்குகிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடம் பிடிக்க இயலும்.
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அணிகள் விவரம்:
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா.
இலங்கை
திசர பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, லாஹிரு திரிமானி, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், அசெலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), அகிலா தனஞ்ஜெயா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், சச்சித் பதிரனா.
முதல் இரண்டு ஓவர்களில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில், ஷிகர் தவன் டக்-அவுட்டானார். பின்னர் 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 18 பந்துகளைச் சந்தித்தும் ரன் எடுக்கத் தவறி பூஜ்ஜியத்தில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள், மணீஷ் பாண்டே 2 ரன்கள், பாண்டியா 10 ரன்களுடனும் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 27/7 என திணறியது பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் தோனி ஜோடி ஓரளவிற்கு ரன் சேர்த்தது. பின்னர் குல்தீப் அவுட் ஆக, பும்ரா வந்தார், அவரை தன் வழிப்படி ஆடி வைத்த தோனி, இந்திய அணியின் ஸ்கோரை 80க்கும் மேல் உயர்த்தினார். 32ஆவது இவரில் பதிரானா பந்தில் பும்ராவிற்கு லெக் பீபோர் கொடுக்கப்பட்டது. உடனடியாக மறுமுனையில் இருந்து அது அவுட் அல்ல என தெரிந்த தோனி ரிவியூ கேட்டு அவரை காப்பாற்றினார்.
அந்த வீடியோ கீழே :