இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.
இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட போஸ்டரை விஜய் பகிர்ந்த ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் விளையாட்டுப் பிரிவில் தோனி குறித்து விராட் கோலி வெளியிட்ட ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்களில் முதல் 10 இடங்களிலும் கிரிக்கெட் வீரர்களே இடம்பிடித்துள்ளார்கள்.
விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்கள் (ஆண்)
1. விராட் கோலி
2. தோனி
3. ரோஹித் சர்மா
4. சச்சின் டெண்டுல்கர்
5. சேவாக்
6. ஹர்பஜன் சிங்
7. யுவ்ராஜ் சிங்
8. பாண்டியா
9. ஜடேஜா
10. பும்ரா
விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்கள் (பெண்)
1. பி.வி. சிந்து
2. ஹிமா தாஸ்
3. சானியா மிர்சா
4. சாய்னா நெவால்
5. மிதாலி ராஜ்
6. மேரி கோம்
7. ஸ்மிருதி மந்தனா
8. டூட்டி சந்த்
9. மானசி ஜோஷி
10. ராணி ராம்பால்
இதனிடையே, பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்கள் தொடர்பான நிகழ்ச்சியை, தோனி விரைவில் தயாரித்து வழங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தோனிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, தோனி, கிரிக்கெட் விளையாட்டில் தீவிர கவனம் செ லுத்திவந்த போதே, இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கு சிறுவயது முதலே, ராணுவம், ராணுவ வீரர்கள். அவர்களின் நாட்டுப்பற்று, தியாக உள்ளம் உள்ளிட்டவைகளின் மீது தீராத ஆர்வம் உண்டு.
இதன்காரணமாக, ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட சின்னத்திரை நிகழ்ச்சியை, தோனி தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட உள்ளது. தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், 2020ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி, சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தோனி, ஹாட்ஸ்டார் சேனலில், Roar of the Lion, featuring Captain Cool himself என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது,. இந்த நிகழ்ச்சியில், தோனியின் ஐபிஎல் வாழ்க்கை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.