இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் ஜூலை 2-ம் தேதி முதல் ஆன்லைனில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனியுடன் இணைந்து ஆர்கா ஸ்போர்ட் நிறுவனம் இந்த பயிற்சி மையத்தினை நிறுவ உள்ளதாக மும்பை மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “நாங்கள் இந்த நடைமுறையில் ஏற்கனவே 200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளித்துள்ளோம். அவர்கள் இதன் மூலம் நல்ல பயனடைந்துள்ளார்கள். வரும் ஜூலை 2-ம் தேதியிலிருந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த பயிற்சி மையத்திற்கு தோனி தலைமை ஏற்பார். வீரர்களும், பயிற்சியாளர்களும் அவர் வழிநடத்துவார்“ என்றனர்.
மேலும் இந்த திட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சர்வதேச வீரர் டேரில் குல்லினனும் அடங்குவார். அவர் பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பொறுத்து இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் தோனி கிரிக்கெட் விளையாடமல் இருப்பதால் அவர் பயிற்சியாளராக நேரத்தை செலவிடலாம் என்று திட்டமிள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தன்னுடைய ஆல்-டைம் லெவன் ஐபிஎல் அணியில் தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். இதேபோல் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை நான்காவது இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியில் வருகிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், தென்னாப்பிரிக்க அணி வீரர் ககிசோ ரபாடா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
ஏபிடி வில்லியர்ஸின் ஆல் – டைம் லெவன் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் பெயர் இடம்பெறவில்லை.
ஏபிடி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, விராட் கோலி, வில்லியம்சன் / ஸ்மித் / டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ககிசோ ரபாடா, ஜஸ்பிரீத் பும்ரா.