அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது. இதில் வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரசீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டனர்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் சில லட்சங்களுக்கு ஏலம் போன ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் தங்களது அணியின் முழு நம்பிக்கையையும் பெற்றதால், தங்களது அணிகளால் பல கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டிருந்தாலும், தோனி, விராட் கோலி, முகமது சிராஜ், மொய்ன் அலி போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிக்கு முன்னுரிமை கொடுத்து தங்களது சம்பளத்தையும் குறைத்து கொண்டனர்.
அப்படி தங்களது அணியின் மீது கொண்ட பற்று காரணமாக சம்பளத்தை குறைத்து கொண்ட டாப் 4 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தோனி ;
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தோனிக்கு 16 கோடி கொடுத்து முதல் வீரராக தக்க வைத்து கொள்ள தயாராக இருந்த போதிலும், தோனியோ சென்னை அணியின் நலனை கருத்தில் கொண்டு தன்னைவிட ஜடேஜாவிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறியதால் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கும், தோனி 12 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டனர். 2021 சீசனில் அவருக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. தனது சம்பளத்தில் 20 சதவிகிதத்தை விட்டுக் கொடுத்துள்ளார் தோனி.